திருவாரூர்: அரசு ஊழியர் தற்கொலை நீதிபதி விசாரணை

0பார்த்தது
திருவாரூர்: அரசு ஊழியர் தற்கொலை நீதிபதி விசாரணை
திருவாரூரில் வீட்டுமனை அங்கீகாரம் பெற லஞ்சம் கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மற்றும் உதவியாளர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டனர். லஞ்சம் வாங்கியபோது பிடிபட்ட உதவியாளர் சுரேஷ்குமார், அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நன்னிலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.