அணுக்கையில் சாம்பவி தீட்சை, ரிஷப யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர் புஷ்பவனாகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கொடி மரம் அருகே எழுந்தருளினர். மங்கள வாத்தியம் முழங்க ரிஷப கொடியை சிவாச்சாரியார்கள் கொடி மரத்தில் ஏற்றி மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பத்து நாட்கள் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.