முத்துப்பேட்டை அருகே காட்டெருமை: மக்கள் அச்சம்

425பார்த்தது
முத்துப்பேட்டை அருகே காட்டெருமை: மக்கள் அச்சம்
திருவாரூர் ஜாம்புவானோடை பகுதியில் கடந்த 4 நாட்களாக காட்டெருமை ஒன்று சுற்றித்திரிகிறது. இது தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஆண்டும் இதேபோல் காட்டெருமை ஒன்று அப்பகுதியில் வந்து மக்களை அச்சுறுத்தியது. ஜாம்புவானோடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம், 'இந்த காட்டெருமை தென்னை, சவுக்கு மரக்கன்றுகளை சேதப்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி