திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உட்கோட்டம் எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் இளம் சிறாரை பாடம் கற்றுத் தருவதாக கூறும் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த பெண்ணின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை முடித்து திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் எதிரிக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 18000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டினார்.