திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வலங்கைமான் நகருக்கு ₹73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 5.6 கிலோமீட்டர் தூரத்திற்கு 13 மீட்டர் அகலத்தில் இருவழிச்சாலை அமைக்கப்படும். நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் இணைந்து சாலைக்கான அடிக்கல் நாட்டினர்.