நீடாமங்கலத்தை சேர்ந்த தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி, அரவதூரைச் சேர்ந்த கைப்பேசி கடை ஊழியர் கௌதமுடன் காதலித்து வந்துள்ளார். கௌதம் திருமணம் செய்வதாகக் கூறி மாணவியை கர்ப்பமாக்கியுள்ளார். மகள் கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் கௌதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.