திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் சுதாவிடம், அரிவாளை காட்டி மிரட்டி 7 ½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற சுரேஷ் (24) என்பவரை வடுவூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கிலி மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்று முவர்கோட்டை, பழஞ்சேரிமேடு பகுதியில் நடந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்து சிறையிலடைத்தனர்.