
சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதை கண்டித்து போராட்டம்
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200 ஏக்கரில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டால் கிராமத்தின் வெப்பநிலை உயர்ந்து, நிலத்தடி நீர் பாதிக்கும், இயற்கை வளம் குறையும் என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலை அமைப்பது சட்டவிரோதம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


























