நன்னிலம் - Nannilam

கொத்தங்குடியில் தொடர் மழையால் தெருவை சூழ்ந்த மழை நீர்

கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி கிராமத்தில், காத்தாயி அம்மன் கோவில் தெருவில் சாலை வசதி இல்லாததால், கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால் தேங்கிய நீர் வடிவதற்கு வழி இன்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் தெருவாசிகள் வீட்டிலிருந்து வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். பாரதி தெருவில் இரண்டு வீடுகளின் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. ஒரு விவசாயியின் கன்று குட்டியும் உயிரிழந்தது. தேங்கிய நீரை அகற்றவும், சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


திருவாரூர்