தமிழ்நாடு எனும் கடலில் தாமரை மலர முடியாது - காதர்மொய்தீன்

219பார்த்தது
பொதக்குடியில் நேற்று உமர் பின் கத்தாப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திற்கு நிறைய காக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன என்றும், காக்கைகள் கோயில்களாக மாற முடியாது என்றும் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தலைவர்கள் வடநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வருவதால் பாரதிய ஜனதா கட்சி வளர முடியாது என்றும், தமிழ்நாடு எனும் கடலில் தாமரை மலர முடியாது என்றும் அவர் கூறினார்.