கூத்தாநல்லூரில் உள்ள ஆக்ஸ்போர்ட் தனியார் பள்ளியின் 43வது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தாமு, பொதுத்தேர்வுகளுக்கு தயாராவது குறித்தும், கைபேசி மற்றும் சமூக ஊடகங்களை தவிர்ப்பது குறித்தும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு அவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.