திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருகிற 13ஆம் தேதி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது மற்றும் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், திமுகவினர் அம்மாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதை தொண்டர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.