ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரிக்கை

0பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கறம்பக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கப் பிரதிநிதி ஒருவர், காவிரி டெல்டாவில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 5 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். பாசன வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரை, வெங்காயத்தாமரை மண்டிக்கிடப்பதால் மழைநீர் வடியாமல் வயல்வெளிகள் கடல் போல் காட்சியளிப்பதாகவும், தமிழ்நாடு அரசு உடனடியாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வெங்காயத்தாமரை செடிகளை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி