திருவாரூர் அருகே தண்டனை ஊராட்சியில் தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கு அவர்களின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் இன்று நேரில் ஆய்வு செய்தார். செயல்பாடுகள் குறித்து ஊழியர்களிடமும், பயனாளிகளிடமும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இத்திட்டம் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.