திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடி செய்திருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் 20,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கின. சமீபத்தில் பெய்த கனமழையால் மன்னார்குடி அருகே தலையாமங்கலம், ஏத்தக்குடி, வடபாதி, பொன்னமங்கலம், குறிச்சி, சோழபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வேர்கள் அழுகத் தொடங்கியுள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.