திருத்துறைப்பூண்டியில் கனமழை: மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடை

2பார்த்தது
திருத்துறைப்பூண்டியில் கனமழை: மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில், நேற்று விடியற்காலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தொடர்ச்சியான கனமழையால், திருத்துறைப்பூண்டி சப்-ஸ்டேஷன் அருகே சோலார் இரும்பு மின் கம்பம், அருகில் கட்டிமேடு சென்ற மின் பாதையில் மூன்று மின்கம்பங்கள் மீது சாய்ந்து விழுந்தது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய பணியாளர்கள் விரைந்து சென்று பணிகளை முடித்து மின் விநியோகத்தை சீரமைத்தனர்.

தொடர்புடைய செய்தி