விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் மாவட்ட செயலாளராக ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மண்டல துணை செயலாளர், மாவட்ட பொருளாளர், மாவட்ட செய்தி தொடர்பாளர், துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சியினர் கலந்துகொண்டனர்.