குடவாசல்: செங்கல்சூளை மேற்பார்வையாளர் கொலை.. மேலும் 2 பேர் கைது

0பார்த்தது
குடவாசல்: செங்கல்சூளை மேற்பார்வையாளர் கொலை.. மேலும் 2 பேர் கைது
குடவாசல் அருகே சேங்காலிபுரத்தில் செங்கல்சூளை மேற்பார்வையாளர் திருமுகம் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருவாரூரைச் சேர்ந்த விக்னேஷ் (36) மற்றும் சத்யராஜ் (35) ஆகியோரை குடவாசல் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இக்கொலை சம்பவத்தில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றன.