மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

0பார்த்தது
மத்திய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை 850 ரூபாயில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்வதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கிடங்குகளுக்கு நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு எடுத்துச் செல்லும் நெல் மூட்டைகளும் தேங்கியுள்ளன.
Job Suitcase

Jobs near you