மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

201பார்த்தது
மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் மத்திய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை 750 ரூபாயில் இருந்து 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கவில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் எடுத்துச் செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தேரடியில் இருந்து 500க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் ஊர்வலமாக வந்து தலைமை தபால் நிலையம் முன்பாக முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி