மேலநம்மங்குறிச்சியில் பழுதான சாலையை செப்பனிட மக்கள் கோரிக்கை

59பார்த்தது
மேலநம்மங்குறிச்சியில் பழுதான சாலையை செப்பனிட மக்கள் கோரிக்கை
முத்துப்பேட்டை அருகே மேலநம்மங்குறிச்சியில் மின்விளக்கு சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. இன்னிலையில் கீழநம்மங்குறிச்சி பாலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் மேலநம்மங்குறிச்சி கிராமத்திற்கு செல்லும் தார்சாலை நான்கு வருடங்களுக்கு முன்பு போடப்பட்டதால், தற்போது குண்டும் குழியுமாக கற்கள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமடைந்துள்ளது. 

இதனால் மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி, வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது கோடைகாலம் என்றபோதிலும் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால், பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சாலையைச் செப்பனிட வேண்டும் என்பது கிராமமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.