திருவாரூர் மாவட்டம் கர்ணாவூர் கிராமத்தில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி அருள்தாஸ், நேற்று காலை தனது வீட்டின் எதிரே ரத்தக்காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார், அருள்தாஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருள்தாஸ் தனது தாயார் வேதாம்பாளுடன் வசித்து வந்துள்ளார்.