முத்துப்பேட்டை அருகே உப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனியப்பன் அவரது வயலில் நெற்கதிர்கள் சாய்ந்து அழிவதைப் பார்த்து மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இதனை அறிந்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் உப்பூரில் விவசாயி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் உடன் இருந்தனர்.