திருத்துறைப்பூண்டி: வர்த்தக ஒப்பந்த நகலை எரித்த பி.ஆர். பாண்டியன்

233பார்த்தது
திருத்துறைப்பூண்டி அருகே ஆண்டாங்கரை கிராமத்தில் நேற்று, விவசாயிகள் இந்தியா-அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம். சுப்பையன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் AP. பாலமுருகன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி