திருத்துறைப்பூண்டி தைக்கால் பள்ளிவாசல் அருகே, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து தமுமுக நகர தலைவர் இக்பால் ராஜா தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர நிர்வாகிகள் நிஜாம், ஒன்றிய தலைவர் அன்சாரி, நிர்வாகிகள் யூசுப், ஜியாவுதீன், ஜமாத் தலைவர் அய்யூப், முத்துப்பேட்டை நகர தலைவர் மன்சூர் மற்றும் ஜமாத்தார்கள், அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.