பழுதடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

0பார்த்தது
விழல்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள கோரையாற்று இணைப்பு நடைபாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தேவங்குடி, விழல்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பலர் தினசரி இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தின் கீழ்ப்பகுதி மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் சிதைந்துள்ளதால், உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதமின்றி மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். பாலத்தை உடனடியாகச் சீரமைத்து, மழைக்காலம் முடிந்தவுடன் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி