திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 60-வது ஆண்டு பேரவை கூட்டம் 60-வது ஆண்டு வைர விழா மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நாளை மன்னார்குடி நடேச பிள்ளை அரங்கில் நடைபெறவுள்ளது.
சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சங்கத்தின் தலைவர் ராஜகோபாலன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்களின் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படவுள்ளது.