திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், சம்பா பருவ நெல் கொள்முதல் பணிகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு செயலாளர் டாக்டர். கே. எஸ். பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் முனைவர். ஆ. அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. மோகனச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெறும் நெல் கொள்முதல் பணிகள் குறித்து விவசாயிகளிடம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.