மேலாளவந்தசேரி கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் மீது
அஜித்குமார் மற்றும் மற்றொருவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி கிராம மக்கள் மன்னார்குடி அருகே வாஞ்சூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி போலீசார் இரு தினங்களுக்குள் குற்றவாளிகளைப் பிடிப்பதாக உறுதியளித்ததையடுத்து
போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மன்னார்குடி - திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.