திருவாரூர் வட்டம் செம்மங்குடியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வ. மோகனச்சந்திரன் இந்த முகாமை பார்வையிட்டு, அங்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.