கோவில் பூசாரிகளுக்கு 5000 ஓய்வூதியம் வேண்டும்

0பார்த்தது
கோவில் பூசாரிகளுக்கு 5000 ஓய்வூதியம் வேண்டும்
திருத்துறைப்பூண்டி நகரில் விசுவ இந்து பரிசத் சார்புடைய பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஓய்வு அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கோவில் வருவாயை கோவில் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், ஆன்மிகவாதிகளை மட்டுமே கோவிலில் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயல் தலைவர் கே. எஸ். மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி