உயிரிழந்த நபர் குறித்து மா. காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

1பார்த்தது
உயிரிழந்த நபர் குறித்து மா. காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீராந்திவடிகால் வாய்க்காலில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கோட்டூர் காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் ஆலிவலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடைபெற்றது. உயிரிழந்தவர் பொன்னிறை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்றும், அவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியத்தின் தலையில் ரத்த காயங்கள் இருந்த நிலையில், உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி