திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலில் குரும்பல் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் (48) என்பவர், வைக்கோல் எடுக்கும் போது அடையாளம் தெரியாத விஷப் பூச்சி கடித்து மயக்கமானார். உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கும், பின்னர் திருவாரூர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.