திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆற்று ரோடு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஷிம்(31) என்பவரின் இருசக்கர வாகனம் வீட்டு முன்பு நிறுத்திவிட்டு சென்றபோது திருடு போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்ற நடவடிக்கைகளைக் குறைக்க திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு ஏற்படுத்தி போதுமான போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.