திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு நேற்று (நவம்பர் 4) அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக சாலையில் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.