திருத்துறைப்பூண்டியில் லாட்டரி விற்பனை செய்த மூவர் கைது

353பார்த்தது
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சேகர் என்பவரை திருவாரூர் ஸ்பெஷல் SI கார்த்தி தலைமையிலான போலீஸ் குழு விசாரணை செய்தது. சேகர் வீட்டில் சோதனை நடத்தியதில், 160 லாட்டரி சீட்டுகள், 2 லட்சத்து 43,700 ரூபாய் பணம், 4 செல்போன்கள், 3 ATM கார்டுகள், 10 பாஸ்புக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவருடன் தொடர்புடைய சுபாஷ் சந்திரபோஸ், பக்கிரிசாமி ஆகியோரும் பிடிபட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி