திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் ஆய்வு செய்தார். உயிரிழந்தவர் பொன்னீரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், உறவினர் சந்திரசேகரன் உடன் சுப்பிரமணியன் சென்றது தெரியவந்தது. சுப்பிரமணியனின் மனைவி இந்திராவுக்கும் சந்திரசேகரனுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இது தெரிந்த சுப்பிரமணியன் கண்டித்ததால், இருவரும் சேர்ந்து சுப்பிரமணியனை மது அருந்த அழைத்து, பின்னர் தலையில் கல்லால் அடித்து வாய்க்காலில் தள்ளி கொலை செய்ததாக சந்திரசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சந்திரசேகரன் மற்றும் இந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.