
வலங்கைமான்: சிறுமி குளிப்பதை படம் எடுத்த 2 பேர் கைது
வலங்கைமான் அருகேயுள்ள உத்தாணி பகுதியில் சிறுமி குளிப்பதை கைப்பேசியில் படம் எடுத்ததாக எழுந்த புகாரில், ராஜதுரை (30) மற்றும் விக்னேஷ் (26) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் வலங்கைமான் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டனர்.























