150 அமமுக வில் இருந்து அதிமுக வில் இணைந்தனர்.

0பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் மற்றும் 150க்கும் மேற்பட்டோர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் ஏற்பாட்டில், அமமுகவின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் செங்கொடி, ஒன்றியச் செயலாளர்கள் பூபதி, மணிகண்டன், பொருளாளர் தமிழ்வாணன், அவைத்தலைவர் ராஜமாணிக்கம், மாவட்டப் பிரதிநிதி பாக்கியராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சக்திவேல், கீழ்வேளூர் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாக இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் ஆசைமணி, திருவாரூர் ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், செந்தில்வேல், குடவாசல் ராமூர்த்தி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.