திமுக அரசை கண்டித்து திருவாரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்

100பார்த்தது
திமுக அரசை கண்டித்து திருவாரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தை சீர்குலைக்க முயலுவதாகக் கூறி திமுக அரசை கண்டித்து ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாவட்டம் முழுவதும் பத்து இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.