திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். ஒன்றிய அரசின் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள ரயில்வே, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசு காலிப்பணியிடங்களை தமிழ்நாடு இளைஞர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், மாநில அரசின் வேலைவாய்ப்பில் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.