திருவாருரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி

76பார்த்தது
திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜூன் 12 குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று மாலை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

திருவாரூர் புதிய ரயில் நிலையத்தின் முன்பாக துவங்கிய பேரணியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி திருவாரூர் பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வந்து வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் குறித்த உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், பணி நியமன குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி