புலிவலத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா

0பார்த்தது
புலிவலத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா
திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கார்த்திக் என்பவர் தனது உணவகத்தில் ஒருநாள் முழுவதும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். இந்த உணவு வழங்கும் நிகழ்வை திருவாரூர் ஒன்றியச் செயலாளர் புலிவலம் தேவா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி