திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் படையினர் திடீர் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில், மருதப்பட்டினம் அருகே முத்துக்கருப்பன், ஜெயபாண்டி, கார்த்தி ஆகியோரிடமிருந்து 103 கிலோ குட்கா, 3.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டனர்.