திருவாரூரில் புத்தகத் திருவிழா: மாணவர்களின் போஸ்டர்கள் வைரல்

254பார்த்தது
திருவாரூரில் இன்று (பிப்.08) முதல் பிப்.17 வரை 10 நாட்களுக்கு புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கண்டகிரயம் எக்கல் அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் க.தங்கபாபு, மாணவர்களுடன் இணைந்து தயாரித்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தலைமை ஆசிரியரும் மாணவர்களும் பாராட்டப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி