திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டார். கோட்டூர் அருகே திருக்கலர், அக்கரைக்கோட்டகம், கருப்புகலர், புழுதிக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மழை நீரில் மூழ்கிய தாளடி பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.