மன்னார்குடியில் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

53பார்த்தது
குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மன்னார்குடியில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார். தேரடி, பெரியார் சிலை, பேருந்து நிலையம் வழியாக பெண்கள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி தூய வளனர் பெண்கள் பள்ளி வரை பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

தொடர்புடைய செய்தி