திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் உள்ள கஸ்தூர்பா காந்தி பள்ளியில் குழந்தைகள் தின விழா, முதியோர்களுக்கு பாத பூஜை செய்யும் விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு குழந்தைகள் சந்தனம், குங்குமம் வைத்து, பூக்கள் தூவி பாத பூஜை செய்தனர். பின்னர், முதியோர்கள் குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினர். பள்ளியின் தாளாளர் சந்திரா முருகப்பன் கூறுகையில், 'தற்போது குழந்தைகள் செல்போன் பார்த்து பெற்றோர்களை மதிக்காதது ஒரு காரணமாக உள்ளது. பெற்றோர்களை வணங்க வேண்டும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த நிகழ்வு நடத்தப்பட்டது' என்றார்.