திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், கொரடாச்சேரியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகளுக்கு கல்வி கற்கவும், பள்ளிக்கு எளிதாகச் செல்லவும் இந்த மிதிவண்டிகள் உதவும்.