திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை இல்லாத நிலையில் விவசாயிகள் தண்ணீரை வடிய வைத்தனர். ஆனால், கடந்த 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் பெய்த கனமழையால் மன்னார்குடி அருகே தலையாமங்கலம், ஏத்தக்குடி, வடபாதி, குறிச்சி, சோழபாண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி வேர்கள் அழுகத் தொடங்கின. வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.